ராமஜென்ம பூமி பக்தர்கள் குழுவினர் வழிபாடு


ராமஜென்ம பூமி பக்தர்கள் குழுவினர் வழிபாடு
x

ராமஜென்ம பூமி பக்தர்கள் குழுவினர் வழிபாடு நடந்தது

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இந்தநிைலயில் அயோத்தியில் இருந்து சிவபிரசாத் ஜெய்வால் தலைமையில் ராமஜென்ம பூமி பக்தர்கள் குழுவினர் கடந்த மாதம் முதல் வருகிற 9-ந்தேதி வரை இந்தியாவில் தங்கி இருந்து ராமபிரான் தங்கி பூஜித்து வழிபாடு நடத்திய இடங்களை தரிசனம் செய்து வருகின்றனர். இதையடுத்து டெல்லி, மத்திய பிரதேசம், உ.பி., ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநில பகுதிகளில் வழிபட்ட ராமஜென்ம பூமி பக்தர்கள் குழுவினர் நேற்று வேதாரண்யத்திற்கு வந்தனர். அப்போது வேதாரண்யத்தில் பெரிய கோவிலும், கோடியக்காடு பகுதியில் உள்ள ராமர் பாதத்திலும் இந்த குழுவினர் வழிபாடு நடத்தினர். பின்னர் இந்த குழுவினர் தில்லைவிளாகம் கோதண்டராமர் கோவிலுக்கு சென்றனர். அப்போது அந்த குழுவினருடன் பா.ஜ.க. வக்கீல் பிரிவு நாகை மாவட்ட தலைவர் முரளி உள்ளிட்ட பலர் உள்ளனர்.


Next Story