வாஸ்து குறிப்பிடும் நான்கு வித மனைகள்


வாஸ்து  குறிப்பிடும்  நான்கு  வித  மனைகள்
x
தினத்தந்தி 14 July 2018 3:00 AM IST (Updated: 13 July 2018 5:23 PM IST)
t-max-icont-min-icon

கட்டிடங்களை அமைக்க தக்க அளவுகளில் பிரித்து விற்கப்படும் நிலப்பகுதிகளான வீட்டுமனைகளை, அவற்றின் அமைப்புக்கேற்ப நான்கு விதமான தன்மை கொண்டவை என்று வாஸ்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ட்டிடங்களை அமைக்க தக்க அளவுகளில் பிரித்து விற்கப்படும் நிலப்பகுதிகளான வீட்டுமனைகளை, அவற்றின் அமைப்புக்கேற்ப நான்கு விதமான தன்மை கொண்டவை என்று வாஸ்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஒன்று முதல் நான்கு வரை பிரிக்கப்பட்டுள்ள அவற்றின் தன்மைகள் பற்றி இங்கே காணலாம். 

முதல் தர மனைகள்

நான்கு பிரதான திசைகளில் வடக்கு அல்லது கிழக்குத் திசையில் மட்டும் சாலை அல்லது அந்த இரண்டு திசைகளிலும் சாலைகள் அமைந்த மனைகள் முதல் தர மனைகளாக குறிப்பிடப்படுகின்றன.

இரண்டாம் தர மனைகள் 

மனைகளுக்கு வடக்கு–கிழக்கு–மேற்கு ஆகிய மூன்று திசைகளிலும், வடக்கு–கிழக்கு–தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும், வடக்கு–மேற்குvஆகிய இரு திசைகளிலும், கிழக்கு–மேற்கு ஆகிய இரு திசைகளிலும், வடக்கு–தெற்கு ஆகிய இரு திசைகளிலும், கிழக்கு–தெற்கு ஆகிய இரு திசைகளிலும் சாலைகள் அமைந்தவை இரண்டாம் தர மனைகளாக குறிப்பிடப்படும். 

மூன்றாம் தர மனைகள் 

மனைகளுக்கு வடக்கு–மேற்கு–தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும், கிழக்கு–மேற்கு–தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும், மேற்கு–தெற்கு ஆகிய இரு திசைகளிலும், மேற்கு திசையில் மட்டும் அல்லது தெற்கு திசையில் மட்டும் சாலைகள் அமைந்தவை மூன்றாம் தர மனைகள் ஆகும். 

நான்காம் தர மனைகள் 

திசைகாட்டி குறிப்பிடும் திசைகளுக்கு இணையாக, மனைகளின் திசைகளும் அமையாமல், 15 டிகிரி என்ற அளவுக்கு மேற்பட்டு இருப்பது மற்றும் வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆகிய கோண திசைகளை நோக்கி அமைந்தவை நான்காம் தர மனைகள் என்று வழங்கப்படுகின்றன.

மனைகள் வாங்கும் சமயத்தில் மேற்கண்ட வி‌ஷயங்களை கவனித்து வாங்குவது சிறப்பானது என்றாலும், பல இடங்களில் மேற்கண்ட விதிமுறைகள் பொருந்தி வருவதில்லை என்று தெரியவந்துள்ளது. அவ்வாறு அமைந்துள்ள மனைகளை தக்க ஆலோசனைகளுக்கு பின்னர் வாங்குவதே நன்மை அளிக்கும் என்றும் வாஸ்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story