உங்கள் முகவரி

பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் உள் அலங்கார முறைகள் + "||" + Interior decorating techniques that reveal heritage

பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் உள் அலங்கார முறைகள்

பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் உள் அலங்கார முறைகள்
வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அழகியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் உள் கட்டமைப்பு அம்சங்கள் பூகோள அமைப்பின்படி பல விதங்களில் இருக்கின்றன.
ஒரு நாட்டிலேயே அவற்றின் வெவ்வேறு பகுதிகளின் தன்மைக்கேற்ற வகையில் வீடுகளின் உள் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

உலக நாடுகள் பலவற்றிலும் வீடுகளை அழகுபடுத்த அவற்றின் பாரம்பரியம் சார்ந்து விதவிதமான வழிகளை கடைபிடித்து வருகிறார்கள். அவற்றில் ஜப்பானிய மக்களால் பரவலாக பின்பற்றப்படும் சில அம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.

தற்போதைய நாகரிக உலகில் ஜப்பான் நாட்டின் ‘மினிமலிஸ்டிக்’ என்ற எளிய தன்மை கொண்ட உள் கட்டமைப்பு யுக்திகள் பலரது கற்பனைக்கு ஏற்றதாக அமைந்துள்ளன. அதன் அடிப்படையில் அவற்றில் கூடுதலாக சில புதுமைகளை புகுத்தி வீடுகள் மற்றும் குடியிருப்புகளை இன்னும் அழகாக மாற்றவும் வாய்ப்பு இருப்பதாக கருதலாம்.

மடக்கக்கூடிய திரைகள்

‘பையோபு’ என்ற பெயர் கொண்ட மரத்தால் செய்யப்பட்ட மடக்கக்கூடிய மறைப்புகள் பெரும்பாலான ஜப்பானிய வீடுகளில் பயன்பாட்டில் உள்ளன. அவை கெட்டியான பல வண்ண பேப்பர்கள் மேற்புறத்தில் ஒட்டப்பட்டு, அறைகளின் மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும்.

அதன் மூலம் அறை சுலபமாக இரு பிரிவாக மாற்றப்படும். பல வண்ண பேப்பர்களில் பழமையான பாரம்பரிய ஓவியங்கள் வரையப்பட்டு மேலும் அழகாக தோற்றம் அளிக்கும். பொதுவாக, அறையில் பூசப்பட்டுள்ள பெயிண்டிங்குக்கு பொருத்தமாக இவ்வகை மடக்கக்கூடிய மறைப்புகள் வடிவமைக்கப்படுவது வழக்கம்.

நகர்த்தும் திரைகள்

வைக்கோல், மூங்கில் போன்றவற்றால் தயாரிக்கப்பட்டதால் ‘ரைஸ் பேப்பர்’ என்று சொல்லப்படும் ‘ஷோஜி’ திரைகள் ஜப்பானில் பிரபலம். வீடுகளின் வாசல் மற்றும் ஜன்னல் ஆகியவற்றிலும், வழிபாட்டு தலங்களிலும் இவ்வகை திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதன் அமைப்பு காரணமாக அறைகளில் சூரிய வெளிச்சம் கச்சிதமான அளவில் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது. நகர்த்தக்கூடியதாக அமைக்கப்படும் நிலையில் அவை ‘பியூஸாமா’ என்றும் சொல்லப்படுகின்றன.

அறை அலங்காரம்

வீட்டின் வரவேற்பு அறை அல்லது முன் பக்க அறையின் ஒரு பகுதியை ஓவியங்கள் வரையப்பட்ட ‘டோகோனோமா’ என்ற தரைப்பகுதியை பிரிக்கும் மறைப்பு தட்டிகள் வைத்து தேநீர் அறை உருவாக்கப்படுகிறது. வரவேற்பறை அலங்காரத்தில் வித்தியாசம் காட்ட விரும்புபவர்கள் இந்த ஜப்பானிய தேநீர் அறை அமைப்பை முயற்சிக்கலாம். அந்த பகுதியில் ஓவியங்கள், போன்சாய் மர வகைகள், மலர்கள் அல்லது கனி வகைகள் அழகுக்காக வைக்கப்படும்.

வீட்டு தோட்டம்

பொதுவாக, தோட்டம் என்பது வீடுகளுக்கு வெளிப்புறமாக பல வகை மரம், செடி மற்றும் கொடிகள் கொண்டதாக அமைக்கப்படுவது பல நாடுகளில் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஜப்பானிய வீடுகளில் மேற்கண்ட அறை தடுப்பு முறைகள் மூலம் வீட்டின் இடங்களை தக்க விதத்தில் பிரித்து அதற்கு பின்னால் உள்ள பகுதியில் தோட்டம் அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதில் பழமையான வழிமுறைகளை இன்றும் ஜப்பானில் கடைபிடித்து வருகிறார்கள். வழக்கமாக இந்த பகுதியிலும் ஓவியங்கள் கொண்ட அழகான மர தடுப்புகள் தேவையான இடங்களில் பொருத்தப்படும்.


தொடர்புடைய செய்திகள்

1. நடுத்தர மக்களை கவரும் புற நகர் குடியிருப்பு திட்டங்கள்
ரியல் எஸ்டேட் துறைக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வரிச்சலுகைகளை அளித்துள்ள நிலையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு அவை நல்ல வாய்ப்புகளாக அமைந்துள்ளன என்ற கருத்தை பலரும் தெரிவித்துள்ளனர்.
2. படரும் கொடி போன்ற சோலார் பேனல்கள்
சமீப காலங்களில் புதிய தொழிற்சாலைகள், பெருகும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் புதிய தொழில் நுட்பத்தில் உருவான மின் சாதன பொருட்கள் ஆகியவற்றின் உபயோகம் காரணமாக மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது.
3. ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கூடுதல் வீடுகள்
பிரதம மந்திரியின் அனைவருக்கு வீடு திட்டத்தின் மூலம் 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 1 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
4. அஸ்திவார அமைப்பில் மூன்று நிலைகள்
கட்டுமான அமைப்புகளுக்கான கடைக்கால் என்ற அஸ்திவார அமைப்பு என்பது அவற்றிற்கு முதலும் முக்கியமானதுமான பணியாகும்.
5. வீட்டு மனைகளில் மரம், செடி, கொடிகள் வளர்ப்பு
வீடு கட்ட தொடங்கும் முன்னரே மரம், செடி, கொடிகளுக்கான தக்க இடத்தை தேர்வு செய்து வளர்க்க ஆரம்பிக்கலாம்.