உங்கள் முகவரி

தண்ணீர் தொட்டிகள் அமைப்பு- பராமரிப்பு + "||" + Water tanks

தண்ணீர் தொட்டிகள் அமைப்பு- பராமரிப்பு

தண்ணீர் தொட்டிகள் அமைப்பு- பராமரிப்பு
மாடியில் மேல்நிலை தொட்டிகள் அமைக்கும் நிலையில் பில்லர்கள் மீது கான்கிரீட் ‘ஸ்லாப்’ அமைத்துத்தான் கட்ட வேண்டும்.
மாடி தரைத்தளத்தின் மீதே தொட்டியை கட்டுவது தவறான முறையாகும். அவ்வாறு அமைத்தால் நீர்க்கசிவுகள் சுவருக்குள் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும். முன்னரே அவ்வாறு அமைக்கப்பட்ட தொட்டி இருப்பின், அதன் உட்புற சுவர்களில் ‘வாட்டர் புரூப்’ சிமெண்டு கொண்டு நன்றாக பூசி விட்டால், நீர்க்கசிவு பிரச்சினைகள் ஏற்படாது.

குறிப்பாக, தரையடி தண்ணீர் தொட்டிகளின் மையத்தில் சிறிய குழியை அமைத்து, தொட்டிக்குள் தரைத்தள சரிவு குழியை நோக்கி வருமாறு அமைக்கவேண்டும். தொட்டியை சுத்தம் செய்யப்படும் நிலையில், கடைசியாக அதில் மீதமாகும் தண்ணீர் அக்குழிக்குள் மட்டும் இருக்கும். அதை எளிதாக சுத்தம் செய்துவிடலாம்.