வல்லுனர் கருத்து : ‘டிஜிட்டல் யுகத்துக்கேற்ப புதிய அணுகுமுறைகள் தேவை..’


வல்லுனர் கருத்து : ‘டிஜிட்டல் யுகத்துக்கேற்ப புதிய அணுகுமுறைகள் தேவை..’
x
தினத்தந்தி 10 Aug 2019 10:08 AM GMT (Updated: 10 Aug 2019 10:08 AM GMT)

‘இந்திய மக்கள் தொகையில் இளைஞர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் சொந்த வீடு வாங்கும் ஆவலை மனதில் கொண்டுள்ளனர்.

மாற்றத்தை நாடும் இளைய சமூகத்தின் இந்த ஆவலானது ரியல் எஸ்டேட் சந்தையின் போக்கில் புதிய கருத்துக்களையும், நவீன வழிமுறைகளையும் கால மாற்றத்திற்கேற்ப மறுசீரமைத்துக்கொள்ள வேண்டிய சூழலை உருவாக்கி இருக்கிறது.

குறிப்பாக, இன்றைய வாடிக்கையாளர்களில் பலரும், தாங்கள் விரும்பும் பொருட்கள் பற்றிய அனைத்து விதமான தகவல்களையும் விரல் நுனியில் வைத்துள்ளனர். வீடுகள் கட்டமைப்பு பற்றிய அவர்களது பார்வைகளும் நவீன மயமாக மாறியுள்ளன. வீட்டின் உள்கட்டமைப்பை சவுகரியமாக எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய அவர்களது பார்வையானது வளர்ந்த நாடுகளின் கட்டுமான யுக்திகளுக்கு ஈடாக உள்ளது.

அதன் காரணமாக, ‘பிளாட் டெவலப்பர்கள்’ மற்றும் ‘பில்டர்கள்’ ஆகியோர் புதிய தொழில்நுட்ப மாற்றங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது. மேலும், உள் கட்டமைப்புகளுக்கான புதிய முதலீடுகளையும் இன்றைய டிஜிட்டல் யுகத்துக்கேற்ப தீர்மானிக்க வேண்டியதாக உள்ளது. அவ்வாறு புதிய தளங்களில் சந்தையின் பரப்புகளை விரிவாக்குவதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தையும் எளிதாக ஈர்க்க முடியும்..’

-ஆஷிஷ் ஆர். புரவங்கரா, நிர்வாக இயக்குனர், புரவங்கரா லிமிடெட். 

Next Story