கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பலவிதமான எஃகு கம்பிகள்


கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பலவிதமான எஃகு கம்பிகள்
x
தினத்தந்தி 23 Oct 2021 4:41 AM GMT (Updated: 23 Oct 2021 4:41 AM GMT)

கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கட்டுமான தொழில்நுட்பம் முதல் இடத்தை பிடித்துள்ளது என்று சொல்லலாம். கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பலவிதமான எஃகு கம்பிகளை பார்ப்போம்...

கட்டுமான தொழில் நுட்பமும் கட்டுமானத் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களும் முன்பு இருந்ததைவிட மிகவும் சிறப்பாக மாறியுள்ளது. கட்டிடங்கள், அணைகள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள், ஆழ்குழாய்கள், தாழ்வான கட்டிடங்கள் மற்றும் உயரமான கட்டிடங்கள் மட்டுமல்லாது வணிக மற்றும் தொழில் துறை பயன்பாட்டிலும் எஃகு கம்பிகள் முக்கியமான கட்டுமானப் பொருளாக உள்ளது. எஃகு கம்பிகள் கட்டமைப்பிற்கு போதுமான வலிமையை அளிக்கின்றன. கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான எஃகு கம்பிகள் :

1.ஹாட் ரோல்ட் டிஃபார்ம்டு பார்கள்

2. கோல்ட் ரோல்ட் டிஃபார்ம்டு பார்கள்

3.மைல்ட் ஸ்டீல் பார்கள்

4.டிவிஸ்ட்ட் ஸ்டீல் பார்கள்

5. வெல்டட் ஸ்டீல் கம்பிகள்

ஹாட் ரோல்ட் டிஃபார்ம்டு பார்கள்:

இவை தெர்மோ மெக்கானிக்கல் ட்ரீடட் பார்கள் அல்லது டிஎம்டி பார்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆர்சிசியில்(வலுவூட்டப்பட்ட கான்கிரீட் அமைப்பு) டிஎம்டி பார்கள் பொதுவாக அதன் உயர் இழுவிசை வலிமைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. டிஎம்டி பார்களில் உள்ள ரிப்கள்(விலா எலும்பு போன்றவை) சிமெண்ட் கான்கிரீட்டில் சிறந்த பிணைப்பை வழங்குகின்றன.சிறந்த தரமான டிஎம்டி பார்கள் 64 ஆயிரம் பிஎஸ்ஐ இழுவிசை வலிமையைக் கொண்டுள்ளது.

*கோல்ட் ரோல்ட் டிஃபார்ம்டு பார்கள்:

ஹாட் ரோல்ட் பார்களைப் போல தோற்றமளித்தாலும் இவ்வகை கம்பிகள் அறை வெப்பநிலையில் செய்யப்படுகின்றன. இவை எளிதில் வளையக் கூடியவை. அதிகம் பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் சில கட்டுமானங்களில் மட்டும் இவ்வகை கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது 60 ஆயிரம் பிஎஸ்ஐ இழுவிசை வலிமையைக் கொண்டுள்ளது.

மைல்ட் ஸ்டீல் பார்கள்:

இவை வெற்று மேற்பரப்பு மற்றும் வட்ட வடிவத்தில் வருகின்றன. இவற்றில் ரிப்கள் இல்லை.இந்த லேசான ஸ்டீல் பார்கள் ஆர்சிசியில் பீம், ஸ்லாப் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதன் இழுவிசை வலிமையானது நாற்பதாயிரம் பிஎஎஸ்ஐ வரை இருக்கும். இவ்வகை கம்பிகள் குறைந்த பட்ஜெட் கொண்ட சிறிய கட்டுமான திட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. *முறுக்கப்பட்ட ஸ்டீல் பார்கள்:

முறுக்கப்பட்ட ஸ்டீல் பார்கள் ப்ரெஸ்ட்ரெஸிங் தசைநார்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.கிட்டத்தட்ட ஏழு வெவ்வேறு கம்பிகள் ஒன்றாக ஒரு இழையாக சுற்றப்பட்டு இவ்வகை கம்பிகள் உருவாக்கப்படுகின்றன. முறுக்கப்பட்ட ஸ்டீல் பார் இரண்டு லட்சத்து எழுபதாயிரம் பிஎஎஸ்ஐ வரை அதிக இழுவிசை வலிமையை கொண்டுள்ளது.வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட்டை நிறுத்துவதற்கு இவை முக்கியமாக சாரக்கட்டுகளின் பிரேஸ்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் அதிக இழுவிசை மற்றும் வலிமை காரணமாக கட்டுமானங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

* வெல்ட்டட் ஸ்டீல் கம்பி:

வெல்டட் ஸ்டீல் கம்பிகள் வெல்ட் மெஷ்ஷைக் கொண்டிருக்கும். இவை நடுத்தர இழுவிசை வலிமையை உருவாக்குகிறது. பகிர்வுகள், வேலிகள்(ஃபென்சிங்) போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன. வெவ்வேறு விட்டங்களில் கிடைக்கும் இவ்வகை கம்பிகள் லேசான எஃகு கம்பிகளை விட அதிகமான வலிமையை கொண்டுள்ளது. இதன் சிறந்த செயல்திறன் காரணமாகவே கட்டுமானத்தில் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

தெர்மோ மெக்கானிக்கலி ட்ரீட்டட் பார்கள் (டிஎம்டி பார்கள்) அதன் அதிக இழுவிசை மற்றும் வலிமை காரணமாக உலக அளவில் பரவலாக கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. டிஎம்டி பார்கள் வலிமையாக இருப்பதோடு போதுமான நெகிழ்வுத் தன்மையையும் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே பூகம்பம்., வெள்ளம் போன்ற எந்த இயற்கை பேரழிவின் போதும் இந்த கம்பிகள் அதிகபட்ச பாதுகாப்பை அளிக்கிறது. டிஎம்டி பார்கள் குறைந்த அளவு கார்பனைக் கொண்டிருப்பதால் அதிக அரிப்பை எதிர்க்கும் சக்தியை கொண்டுள்ளது. ஐஎஸ்ஐ தரத்தின்படி டிஎம்டி கம்பிகள் அதிக வலிமை மற்றும்நெகிழ்வுத்தன்மையை கொண்டிருப்பதால் பெரும்பாலான கட்டுமானத்திற்கு இவை பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது.

கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் எஃகு கம்பிகளின் அளவுகள்:

6 மிமீ, 8மிமீ, 10மிமீ, 12மிமீ, 16மிமீ, 20மிமீ,25மிமீ, 32மிமீ, 40மிமீ, 45மிமீ, 50மிமீ, 60மிமீ,மற்றும் 75மிமீ, 90மிமீ ,100மிமீ போன்ற அதிக அளவுகளில் தனிப்பட்ட பெரிய நிறுவனங்களின் கட்டுமான பயன்பாட்டிற்காகவும் எஃகு கம்பிகள் தேவையான அளவுகளில் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

6மிமீ மற்றும் 8மிமீ அளவு/ விட்டம் கொண்ட எஃகு கம்பிகள் ஸ்ட்டிர்ரப் அமைப்பிலும், 8மிமீ முதல் 12மிமீ அளவு/ விட்டம் கொண்ட எஃகு கம்பிகள் ஸ்லாப்கள்,12மிமீ முதல் 25மிமீ அளவு/ விட்டம் கொண்ட எஃகு கம்பிகள் பீம் மற்றும் காலங்களை அமைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

Next Story