மகளிர் கிரிக்கெட் உலககோப்பை: 48 ரன்களில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்


மகளிர் கிரிக்கெட் உலககோப்பை: 48 ரன்களில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்
x
தினத்தந்தி 3 July 2017 6:51 AM GMT (Updated: 2017-07-03T12:20:58+05:30)

மகளிர் கிரிக்கெட் உலககோப்பை போட்டியில் தென்னாப்ரிக்காவிற்கு எதிராக 48 ரன்களில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி.

இங்கிலாந்து, 

மகளிர் உலககோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் தென்னாப்ரிக்காவும் மேற்கிந்திய தீவுகளும் மோதினர்.

இப்போட்டியில் டாசில் வென்ற தென்னாப்ரிக்கா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளின் தொடக்க ஆட்டகாரர்கள் மூவரும் 4 ரன்னில் ஆட்டமிழந்தனர். சிடன் நேசன் மட்டும் 26 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 25.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 48 ரன்கள் மட்டுமே எடுத்தது. திறமையாக பந்துவீசிய கேப்டன் டேன் வன் நேகர்க், மரிசேன் தலா 4 விக்கெட்கள் வீழ்த்தினர். நேகர்க் 3.2 ஓவர்களில் ரன் ஏதும் விட்டு கொடுக்காமல் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

தோடர்ந்து 49 ஓட்டங்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய தேன்னாப்ரிக்கா 6.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லிசெல் லீ 29 ரன்களும் லாரா 19 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அபாரமாக வெற்றி பெற்றது. மரிசேன் சிறந்த வீரருக்கான விருது பெற்றார்.

முன்னதாக நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. ஆஸ்திராலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. பாகிஸ்தான் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.

அடுத்த லீக் ஆட்டங்கள் ஜூலை 5ம் தேதி நடைபெரும்.

Next Story