கிரிக்கெட்

கடைசி ஒரு நாள் போட்டி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை வென்ற நியூசிலாந்து + "||" + Last one day match New Zealand beat West Indies and win the series

கடைசி ஒரு நாள் போட்டி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை வென்ற நியூசிலாந்து

கடைசி ஒரு நாள் போட்டி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை வென்ற நியூசிலாந்து
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி கண்டு தொடரை 3–0 என்ற கணக்கில் முழுமையாக தனதாக்கியது.

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 26 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதன் பிறகு பொறுப்பு கேப்டன் டாம் லாதமும், முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பலத்த மழை பெய்ததால் ஆட்டம் கிட்டத்தட்ட 5 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து 23 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 23 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தது. ராஸ் டெய்லர் 47 ரன்களுடனும் (54 பந்து, 6 பவுண்டரி), ஹென்றி நிகோல்ஸ் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். லாதம் 37 ரன்களில் கேட்ச் ஆனார்.

பின்னர் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி 23 ஓவர்களில் 166 ரன்கள் எடுக்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீசுக்கு இலக்கு திருத்தி அமைக்கப்பட்டது. இதை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் முதல் ஓவரிலேயே கிறிஸ் கெய்ல் (4 ரன்) காலி ஆனார். வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் மிரண்டனர். 4–வது ஓவரின் போது அந்த அணியின் விக்கெட் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்திருந்தது. கேப்டன் ஜாசன் ஹோல்டர் (34 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 23 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 9 விக்கெட்டுக்கு 99 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் நியூசிலாந்து அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் 3–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் பவுல்ட், சான்ட்னெர் தலா 3 விக்கெட்டுகளும், மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி நெல்சனில் நாளை மறுதினம் நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது.
2. வெஸ்ட் இண்டீசை புரட்டியெடுத்தது: வங்காளதேச அணி இன்னிங்ஸ் வெற்றி
டாக்காவில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை புரட்டியெடுத்த வங்காளதேச அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
3. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வங்காளதேச அணி 508 ரன்கள் குவிப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், வங்காளதேச அணி 508 ரன்கள் குவித்துள்ளது.
4. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேசம் 259 ரன்கள் சேர்ப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வங்காளதேசம் 259 ரன்கள் சேர்த்தது.
5. வெஸ்ட் இண்டீஸ் 109 ரன்னில் சுருண்டது: முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி
கொல்கத்தாவில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 109 ரன்களுக்குள் சுருட்டிய இந்திய அணி, அந்த இலக்கை போராடி எட்டிப்பிடித்தது.