கிரிக்கெட்

4 நாள் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை சுருட்டியது தென்ஆப்பிரிக்கா + "||" + 4 day Test ends on 2nd day: South Africa scattered Zimbabwe

4 நாள் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை சுருட்டியது தென்ஆப்பிரிக்கா

4 நாள் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை சுருட்டியது தென்ஆப்பிரிக்கா
ஜிம்பாப்வேக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2-வது நாளிலேயே தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
போர்ட் எலிசபெத்,

தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 4 நாள் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 309 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. எய்டன் மார்க்ராம் 125 ரன்களும், பவுமா 44 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட்டுக்கு 30 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த ஜிம்பாப்வே அணி தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திண்டாடியது. வெறும் 30.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே 68 ரன்களில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. அந்த அணியின் 5-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். ரையான் பர்ல் (16 ரன்), கைல் ஜார்விஸ் (23 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை. தென்ஆப்பிரிக்க தரப்பில் மோர்னே மோர்கல் 5 விக்கெட்டுகளை அள்ளினார். இன்னிங்சில் அவர் 5 விக்கெட் எடுப்பது இது 7-வது முறையாகும். ரபடா, பெலக்வாயோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நான்கு நாள் டெஸ்டில் 150 ரன்கள் வித்தியாசம் இருந்தாலே ‘பாலோ-ஆன்’ கொடுக்க முடியும் என்று ஐ.சி.சி. புதிய விதிமுறையை வகுத்து இருப்பதால், அதன் அடிப்படையில் ஜிம்பாப்வேக்கு ‘பாலோ-ஆன்’ வழங்கி தொடர்ந்து பேட் செய்யும்படி தென்ஆப்பிரிக்கா பணித்தது.

இதையடுத்து 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடிய ஜிம்பாப்வே அணி மறுபடியும் தத்தளித்தது. முன்னணி வீரர்களான சிபாபா 15 ரன்களிலும், ஹாமில்டன் மசகட்சா 13 ரன்னிலும், பிரன்டன் டெய்லர் 16 ரன்களிலும், கிரேக் எர்வின் 23 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். 2-வது இன்னிங்சில் ஜிம்பாப்வே 42.3 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

புதிய முயற்சியாக கொண்டு வரப்பட்ட பகல்-இரவு 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரு நாள் தொடரை வெல்வது யார்? பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 4 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2-ல் வெற்றி கண்டுள்ளன.
2. ஜிம்பாப்வே: தனியார் பேருந்துடன் கரும்பு லாரி மோதல் - 12 பேர் பலி
ஜிம்பாப்வே நாட்டில், தனியார் பேருந்துடன் கரும்பு லாரி மோதிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.
3. ஜிம்பாப்வேயில் பஸ் தீப்பிடித்தது 42 பேர் பரிதாப சாவு
ஜிம்பாப்வே நாட்டின் ஜாவிஷாவானே நகரத்தில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் மியூசினா நகருக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
4. ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட்: முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதத்தால் வங்காளதேச அணி 522 ரன்கள் குவிப்பு
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதத்தால் வங்காளதேச அணி 522 ரன்கள் குவித்தது.
5. ஜிம்பாப்வே நாட்டில் பேருந்துகள் மோதல்: 47 பேர் பலியான பரிதாபம்
ஜிம்பாப்வே நாட்டில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 47 பேர் பலியாகினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...