கிரிக்கெட்

இரு நாட்டு கிரிக்கெட் தொடர்: இந்தியாவிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை + "||" + The two cricket series: There is no need to plead to India

இரு நாட்டு கிரிக்கெட் தொடர்: இந்தியாவிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை

இரு நாட்டு கிரிக்கெட் தொடர்: இந்தியாவிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் கராச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் கராச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடுவதை இந்தியா விரும்பவில்லை. இந்தியாவுடன் போட்டியில் விளையாடாவிட்டால் நமது கிரிக்கெட் ஒன்றும் மடிந்து விடாது. எனவே அவர்களுடன் கிரிக்கெட் பற்றிய நினைப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இப்போதைக்கு மறந்து விட வேண்டும்.

இந்தியாவுடன் நேரடி தொடரில் மோதி 10 ஆண்டுகள் ஆகி விட்டது. அதனால் நமது கிரிக்கெட் தளர்ந்து விட்டதா என்ன? இப்போது தான் நன்றாக விளையாடி வருகிறோம். ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது உதாரணமாக சொல்லலாம். 2009–ம் ஆண்டுக்கு பிறகு பெரிய அணிகள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாவிட்டாலும் இங்கு கிரிக்கெட் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது.

எனவே இந்தியாவுடன் நேரடி தொடர்களுக்காக கெஞ்சி கூத்தாட வேண்டிய அவசியம் இல்லை. செலவினங்களை குறைக்கும் பட்சத்தில் கிரிக்கெட் வாரியத்தை சிறப்பாக நடத்த முடியும்.

இவ்வாறு மியாண்டட் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பயங்கரவாத ஊடுருவலை தடுக்க இதுவரை எதுவும் செய்யவில்லை? இம்ரான்கான் நம்பகத்தன்மை உடையவரா?
பயங்கரவாத ஊடுருவலை தடுக்க இதுவரை எதுவும் செய்யவில்லை. இம்ரான்கான் நம்பகத்தன்மை உடையவரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
2. உலகைச்சுற்றி
பாகிஸ்தானின் பிரபல பெண் எழுத்தாளர் கலிதா ஹூசைன் உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.
3. இந்திய அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
சிட்னியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 288 ரன்களை சேர்த்துள்ளது.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பந்து வீச்சு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.
5. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 262 ரன்னில் ஆல்-அவுட்
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணி 262 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.