கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 4-வது தோல்வி + "||" + Vijay Hazare Cup Cricket 4th defeat in Tamil Nadu

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 4-வது தோல்வி

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 4-வது தோல்வி
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி நேற்று 4-வது தோல்வியை சந்தித்தது.
சென்னை,

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 28 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் தமிழக அணி நேற்று ஆந்திராவை எதிர்கொண்டது. சென்னையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆந்திரா 6 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் சேர்த்தது. ஸ்ரீகர் பரத் (88 ரன்), சுமந்த் (62 ரன்), ரிக்கி புய் (52 ரன்) அரைசதம் அடித்தனர்.


தொடர்ந்து ஆடிய தமிழக அணி 48.5 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஆந்திரா 29 ரன்கள் வித்தியாசத்தில் 4-வது வெற்றியை பெற்றது. தமிழக அணியில் அதிகபட்சமாக கோசிக் 56 ரன்களும், கவுசிக் காந்தி 44 ரன்களும், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 40 ரன்களும் எடுத்தனர். 5-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணிக்கு இது 4-வது தோல்வியாகும். ஏற்கனவே கால்இறுதி வாய்ப்பை இழந்து விட்ட தமிழக அணி கடைசி லீக்கில் ராஜஸ்தானை நாளை மறுதினம் சந்திக்கிறது.

பெங்களூருவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பஞ்சாப்-கர்நாடகா அணிகள் மோதின. மழையால் 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. சுப்மான் கில் 123 ரன்களும் (122 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் யுவராஜ்சிங் 36 ரன்களும் (28 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினர். சுப்மான்கில், ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தொடர்நாயகன் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து களம் இறங்கிய கர்நாடக அணியால் 42 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றியை ருசித்தது. கர்நாடகா விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் 107 ரன்கள் (91 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தும் பலன் இல்லை.

‘டி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி நிர்ணயித்த 330 ரன்கள் இலக்கை சவுராஷ்டிரா அணி 48.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சவுராஷ்டிரா வீரர் ரவீந்திர ஜடேஜா சதம் (7 பவுண்டரி, 4 சிக்சருடன் 113 ரன்) அடித்து களத்தில் இருந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்துக்கு அடிப்படை வசதி - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதி
புதுவை கிரிக்கெட் மைதானத்திற்கு சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதி அளித்துள்ளார்.
2. ஏரியூர் அருகே கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் சாவு
ஏரியூர் அருகே கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
3. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது.
4. உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் டர்சி ஷார்ட் 257 ரன்கள் குவித்து சாதனை
ஆஸ்திரேலியாவில் ஜே.எல்.டி. கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
5. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இஷாந்த் ‌ஷர்மா, அஸ்வினுக்கு உடல் தகுதி சோதனை
இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ‌ஷர்மா, சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஆகியோருக்கு பெங்களூருவில் நாளை உடல் தகுதி சோதனை நடத்தப்படுகிறது.