கிரிக்கெட்

சர்ச்சை வழக்கில் ஜாமீன்: இங்கிலாந்து அணியினருடன் பென் ஸ்டோக்ஸ் இணைகிறார் + "||" + With England team Ben Stokes joins

சர்ச்சை வழக்கில் ஜாமீன்: இங்கிலாந்து அணியினருடன் பென் ஸ்டோக்ஸ் இணைகிறார்

சர்ச்சை வழக்கில் ஜாமீன்: இங்கிலாந்து அணியினருடன் பென் ஸ்டோக்ஸ் இணைகிறார்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் நகரில் உள்ள இரவு விடுதியில் போதையில் வாலிரை தாக்கி தகராறு செய்ததாக சர்ச்சை கிளம்பியது.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் நகரில் உள்ள இரவு விடுதியில் போதையில் வாலிரை தாக்கி தகராறு செய்ததாக சர்ச்சை கிளம்பியது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸ் உடனடியாக விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு பிரிஸ்டல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முதல்முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது பென் ஸ்டோக்ஸ் நேரில் ஆஜராகி தான் எந்தவித தவறும் செய்யவில்லை என்று முறையிட்டார். பென் ஸ்டோக்ஸ் உள்பட வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கும் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணை மார்ச் 12–ந் தேதி தொடங்கும் என்று அறிவித்தார். இதையடுத்து நியூசிலாந்தில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியினருடன் பென் ஸ்டோக்ஸ் இணைய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. அவர் நியூசிலாந்துக்கு இன்று புறப்பட்டு செல்கிறார்.