கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்
x
தினத்தந்தி 4 March 2018 9:43 AM GMT (Updated: 4 March 2018 9:43 AM GMT)

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #DineshKarthik

கொல்கத்தா,

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில்  விக்கெட் கீப்பராக விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்கை ஜ.பி.எல் ஏலத்தில் 7.4 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  எடுத்தது. இந்த வருடம் நடக்க உள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் கோல்கட்டா அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த தொடரில் கேப்டனாக இருந்த கவுதம் காம்பீர் டில்லி அணிக்கு சென்ற நிலையில், தினேஷ் கார்த்திக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

11-வது ஐ.பி.எல் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்த அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஐ.பி.எல் தொடர்களில் தினேஷ் கார்த்திக் பெங்களூர், டெல்லி, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளில் விளையாடியுள்ளார். தற்போது, இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு டி20 தொடரில் விக்கெட் கீப்பராக விளையாட உள்ளார். மேலும் துணைக்கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே,  பஞ்சாப் அணியில் தமிழகத்தின் சுழற்பந்து வீச்சாளர்  ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story