ரபடாவின் அப்பீல் குறித்து நாளை மறுதினம் விசாரணை


ரபடாவின் அப்பீல் குறித்து நாளை மறுதினம் விசாரணை
x
தினத்தந்தி 16 March 2018 8:45 PM GMT (Updated: 16 March 2018 8:33 PM GMT)

தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடாவுக்கு 2 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

ஜோகன்னஸ்பர்க்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் தோள்பட்டையை இடித்ததால் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடாவுக்கு 2 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது. தான் வேண்டுமென்றே இடிக்கவில்லை என்று வாதிட்ட ரபடா, தடையை எதிர்த்து அப்பீல் செய்து இருக்கிறார். மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்தும் ஆணையராக நியூசிலாந்தை சேர்ந்த மைக்கேல் ஹெரோன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்துகிறார். விசாரணையை முடித்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் தனது முடிவை அவர் தெரிவிப்பார்.

இதற்கிடையே, ரபடா தடையில் சிக்கியதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டவுனில் 22–ந்தேதி தொடங்கும் 3–வது டெஸ்டுக்கு தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் களம் திரும்பக்கூடும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் இந்த டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை என்று ஸ்டெயின் கூறியுள்ளார்.


Next Story