ஜிம்பாப்வே கேப்டனை சூதாட்டத்துக்கு அணுகிய கிரிக்கெட் சங்க நிர்வாகிக்கு 20 ஆண்டுகள் தடை


ஜிம்பாப்வே கேப்டனை சூதாட்டத்துக்கு அணுகிய கிரிக்கெட் சங்க நிர்வாகிக்கு 20 ஆண்டுகள் தடை
x
தினத்தந்தி 27 March 2018 8:45 PM GMT (Updated: 27 March 2018 8:42 PM GMT)

ராஜன் நாயர் கடந்த ஆண்டு கிரிக்கெட் சூதாட்டம் (மேட்ச் பிக்சிங்) செய்வது குறித்து அணுகி பேசினார்.

துபாய்,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டன் கிரிமரை, அந்த நாட்டில் உள்ள ஹராரே மாநகர கிரிக்கெட் சங்க பொருளாளரும், மார்க்கெட்டிங் இயக்குனருமான ராஜன் நாயர் கடந்த ஆண்டு கிரிக்கெட் சூதாட்டம் (மேட்ச் பிக்சிங்) செய்வது குறித்து அணுகி பேசினார். இது குறித்து கிரிமர் உடனடியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது. இதில் சூதாட்டம் செய்வது தொடர்பாக கிரிமருடன் தொடர்பு கொண்டதை ராஜன் நாயர் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க ராஜன் நாயருக்கு 20 ஆண்டுகள் தடை விதித்து ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.


Next Story