கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மும்பை சென்றனர் + "||" + Chennai Super Kings went to Mumbai

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மும்பை சென்றனர்

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மும்பை சென்றனர்
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் முதல் போட்டியில் பங்கேற்பதற்காக மும்பை சென்றனர்.
சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 ஆண்டுக்கு பிறகு திரும்பியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எழுச்சியுடன் தயாராகி வருகிறது. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா மற்றும் சக வீரர்கள் கடந்த 10 நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில் பயிற்சியை முடித்துக் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் நேற்று மும்பைக்கு புறப்பட்டு சென்றனர். விமான நிலையம் மற்றும் விமானத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை அந்த அணி வீரர்கள் டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பையில் 7-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...