கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட் : மும்பை இந்தியன்ஸ் அதிரடி ஆட்டம், துவக்க வீரர் சூர்ய குமார் அரைசதம் அடித்தார் + "||" + IPL: The Mumbai team has been launched by the Suryakumar Yadav

ஐ.பி.எல் கிரிக்கெட் : மும்பை இந்தியன்ஸ் அதிரடி ஆட்டம், துவக்க வீரர் சூர்ய குமார் அரைசதம் அடித்தார்

ஐ.பி.எல் கிரிக்கெட் : மும்பை இந்தியன்ஸ் அதிரடி ஆட்டம், துவக்க வீரர் சூர்ய குமார் அரைசதம் அடித்தார்
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. #IPL #MI #DD
மும்பை,

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைப்பெற்றுவரும்  9-வது லீக் ஆட்டத்தில்  டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் கௌதம் கம்பீா் மும்பை அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.  

இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. நடப்பு சாம்பியனாக இருந்த போதிலும், கடந்த 2 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது, அந்த அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கிய இந்த  போட்டியில், மும்பை அணியின் இன்னிங்சை எவின் லீவிஸ், சூர்யகுமார் யாதவ் இருவரும் துவக்கினர். முதல் ஓவரிலேயே  15 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை இந்த ஜோடி துவக்கியது. இவா்களின் அதிரடி ஆட்டத்தின் மூலம மும்பை அணி 50 ரன்களை 4 ஓவா்களிலேயே  தொட்டது.

பின்னா் வந்த முகமது ஷமி பந்தையும் மைதானத்தின் நாலபுறமும் இந்த ஜோடி சிதறடித்தது. இதனால் 5 ஓவா்கள் முடிவில் 66 ரன்கள் எடுத்து விக்கெட்டு இழக்காமல் மும்பை அணி விளையாடி வந்ததது.

இந்நிலையில் 9 ஓவா் முடிவில் ராகுல் பந்தில்  எவின் லீவிஸ்48(28 பந்து, 4 பவுண்டரி,4 சிக்சா்)  கேட்ச் கொடுத்து வெளியேறினார். அரைசதம் அடித்த  சூர்ய குமார் யாதவ் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது, மும்பை அணி 14 ஓவா்கள்  முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை சோ்த்து விளையாடி வருகிறது.