கிரிக்கெட்

20 -ஓவர் போட்டிகளில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை எட்டினார் ரோகித் சர்மா + "||" + Rohit Sharma becomes 1st Indian to hit 300 sixes in T20 cricket

20 -ஓவர் போட்டிகளில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை எட்டினார் ரோகித் சர்மா

20 -ஓவர் போட்டிகளில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை எட்டினார் ரோகித் சர்மா
20 -ஓவர் போட்டிகளில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா எட்டியுள்ளார். #RohithSharma
மும்பை,

20 ஓவர் போட்டிகளில் 300 சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மா, இந்திய பேட்ஸ்மேன்களில் இந்த எண்ணிக்கையை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நேற்று நடைற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 17 -வது ஓவரின் போது, முஜீப் உர் ரகுமான் ஓவரில் தனது 300-வது சிக்சரை ரோகித் சர்மா அடித்தார். 

ரோகித் சர்மா, சர்வதேச போட்டிகளில் 78 சிக்சர்களும், ஐபிஎல் தொடரில் 183 சிக்சர்களும், சம்பியன்ஸ் லீக், சையது முஸ்தாக் அலி டிராபி உட்பட பிற  தொடர்களில் 40 சிக்சர்களையும் விளாசியுள்ளார். மொத்தமாக தற்போது, ரோகித் சர்மா 301 சிக்சர்களை அடித்துள்ளார். 

20 ஓவர்கள்  போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் (844 சிக்சர்கள்) முதலிடம் வகிக்கிறார். இதைத்தொடர்ந்து, பொல்லார்டு ( வெஸ்ட் இண்டீஸ், 525 சிக்சர்கள்), மெக்கல்லம் (நியூசிலாந்து,  445),  ஸ்மித் (வெஸ்ட் இண்டீஸ், 367), ஷேன் வாட்சன் ( ஆஸ்திரேலியா, 357), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா 319), ரோகித் சர்மா ( இந்தியா, 301) முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.