கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு + "||" + ODI cricket against Australia: England squad announcement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஸ்காட்லாந்து சென்று அந்த நாட்டு அணியுடன் ஒரே ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி எடின்பர்க்கில் ஜூன் 10-ந் தேதி நடக்கிறது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஆடுகிறது. இந்த ஆட்டம் ஜூன் 13-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த இரண்டு போட்டி தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இரண்டு தொடருக்கும் இயான் மோர்கன் கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போட்டியில் வலது கைவிரலில் காயம் அடைந்ததால், வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் நலநிதி போட்டிக்கான உலக லெவன் அணியில் இருந்து விலகிய இயான் மோர்கன் இந்த போட்டி தொடருக்கு முன்பாக உடல் தகுதியை பெற்று விடுவார் என்பதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டிக்கான இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுமான ஜோஸ்பட்லருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஜோஸ்பட்லர், வேகப்பந்து வீச்சாளர் டாம் குர்ரன் ஆகியோர் அணிக்கு திரும்புகிறார்கள். அணியில் இருந்து சாம் பில்லிங்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணி வருமாறு:-

இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், டாம் குர்ரன், அலெக்ஸ் ஹாலெஸ், பிளங்கெட், அடில் ரஷித், ஜோரூட், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட்.


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய தொடர் சமபலம் மிக்கதாக இருக்கும்: புவனேஷ் குமார்
ஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய தொடர் சமபலம் மிக்கதாக இருக்கும் என்று புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் 282 ரன்களில் ஆல்-அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 282 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி சிறப்பான தொடக்கம்
முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பான தொடக்கம் அமைத்தது. அதில் முகமது ஹபீஸ் சதம் அடித்தார்.
4. ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடக்கம்
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ளது.
5. ஆஸ்திரேலியாவில் உள்கட்சி பிரச்சினையில் பிரதமர் மால்கம் டர்ன்புல் பதவி தப்பியது
ஆஸ்திரேலியாவில் உள்கட்சி பிரச்சினையில் நடந்த திடீர் ஓட்டெடுப்பில், உள்துறை மந்திரியை வீழ்த்தி பிரதமர் மால்கம் டர்ன்புல் தன் பதவியை தக்க வைத்தார்.