கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் இன்று மோதல் + "||" + TNPL. Cricket Chepauk Super Gillies Madurai Panthers today confront

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் இன்று மோதல் நெல்லையில் நடக்கிறது.
நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நெல்லையில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, டி.ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியை சந்திக்கிறது. நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சிடம் தோற்றது. 40 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய கில்லீஸ் அணி, இன்றைய ஆட்டத்தில் நிலைத்து நின்று ஆடுவதில் கூடுதல் கவனமுடன் செயல்படும் என்று நம்பலாம். நெல்லை ஆடுகளம், பேட்டிங்குக்கு உகந்தது என்பதால் பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டியது அவசியமாகும்.


மதுரை அணி தனது தொடக்க ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல்லிடம் தோற்று இருந்தது. அந்த அணியும் முதலாவது வெற்றிக்காக களம் இறங்குவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. முந்தைய இரு சீசன்களில் இவ்விரு அணிகளும் சந்தித்த இரண்டு ஆட்டங்களிலும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.