கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணிக்கு 194 ரன்கள் இலக்கு + "||" + Against England First Test cricket 194 runs for India

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணிக்கு 194 ரன்கள் இலக்கு

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணிக்கு 194 ரன்கள் இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பர்மிங்காம்,

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்

இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 80 ரன்னும், விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ 70 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது ‌ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி, கேப்டன் விராட்கோலியின் (149 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டு 274 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

3–வது நாள் ஆட்டம்

13 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2–வது நாள் ஆட்டம் முடிவில் 3.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஜென்னிங்ஸ் 5 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

நேற்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. ஜென்னிங்ஸ், கேப்டன் ஜோரூட் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி ஆகியோர் தங்களது துல்லியமான தாக்குதலை தொடுத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 18 ரன்னை எட்டிய போது ஜென்னிங்ஸ் (8 ரன், 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) அஸ்வின் பந்து வீச்சை அடித்து ஆட முயல பந்து பேட்டில் பட்டு ‘எட்ஜ்’ ஆகி ஸ்லிப்பில் நின்ற லோகேஷ் ராகுலிடம் கேட்ச் ஆனது.

ஜோரூட் 14 ரன்னில் ‘அவுட்’

அடுத்து டேவிட் மலான் களம் இறங்கினார். முதல் இன்னிங்சில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஜோரூட் இந்த இன்னிங்சில் விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அஸ்வின் பந்து வீச்சை தடுத்து ஆடிய ஜோரூட் (14 ரன்கள், 35 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) லெக் ஸ்லிப்பில் நின்ற லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ, டேவிட் மலானுடன் ஜோடி சேர்ந்தார். அப்போது பந்து வீச்சை தொடங்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ‌ஷர்மா இருவருக்கும் கடும் நெருக்கடி அளிக்கும் விதத்தில் நேர்த்தியாக பந்து வீசினார். அவரது ஒரு ஓவரில் பேர்ஸ்டோ 2 பவுண்டரி விளாசினார். இருப்பினும் தொடர்ந்து கிடுக்குப்பிடியாக பந்து வீசிய இஷாந்த் ‌ஷர்மா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை சாய்த்தார்.

இஷாந்த் ‌ஷர்மா அசத்தல்

இஷாந்த் ‌ஷர்மா பந்து வீச்சில் டேவிட் மலான் (20 ரன்கள், 64 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இஷாந்த் ‌ஷர்மா வீசிய ஒரு ஓவரில் பேர்ஸ்டோ (28 ரன்கள், 40 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) ஷிகர் தவானிடம் கேட்ச் ஆகியும், பென் ஸ்டோக்ஸ் (6 ரன்) ஸ்லிப்பில் நின்ற விராட்கோலியிடம் கேட்ச் கொடுத்தும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 86 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

உணவு இடைவேளை முடிந்து திரும்பியதும், இஷாந்த் ‌ஷர்மா தனது 2–வது பந்தில் அதே ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை சாய்த்தார். அவரது பந்து வீச்சில் ஜோஸ்பட்லர் (1 ரன்) விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 31–வது ஓவரில் இஷாந்த் ‌ஷர்மா 3 விக்கெட்டுகளை ஒவ்வொரு பந்து இடைவெளியில் சாய்த்து அசத்தினார். அப்போது அணியின் ஸ்கோர் 87 ரன்னாக இருந்தது.

இங்கிலாந்து அணி 180 ரன்னில் ‘ஆல்–அவுட்’

இதனை அடுத்து அடில் ரஷித், சாம் குர்ரனுடன் ஜோடி சேர்ந்தார். சாம் குர்ரன் அடித்து ஆடி இங்கிலாந்து அணி கவுரமான ஸ்கோரை எட்ட வழிவகுத்தார். அவருடன் இணைந்த அடில் ரஷித் (16 ரன், 40 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) உமேஷ் யாதவ் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களம் கண்ட ஸ்டூவர்ட் பிராட் (11 ரன்கள்) இஷாந்த் ‌ஷர்மா பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ஷிகர் தவானிடம் கேட்ச் ஆனார். நிலைத்து நின்று ஆடிய சாம் குர்ரன் 65 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 63 ரன்கள் சேர்த்த நிலையில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 53 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் நின்றார். இந்திய அணி தரப்பில் இஷாந்த் ‌ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

194 ரன்கள் இலக்கு

பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2–வது இன்னிங்சை ஆடியது.


அதிகம் வாசிக்கப்பட்டவை