கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி + "||" + Last 20 ODI against West Indies: Bangladesh team win

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.
லாடெர்ஹில்,

வெஸ்ட்இண்டீஸ்-வங்காளதேச அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் உள்ள லாடெர்ஹில்லில் நேற்று முன்தினம் நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச அணி கேப்டன் ஷகிப் அல்-ஹசன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி தொடக்க ஆட்டக் காரர்களாக லிட்டான் தாஸ், தமிம் இக்பால் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். 4.4 ஓவர்களில் ஸ்கோர் 61 ரன்னாக இருந்த போது தமிம் இக்பால் (21 ரன்கள், 13 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) பிராத்வெய்ட் பந்து வீச்சில் கேஸ்ரிக் வில்லியம்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து களம் கண்ட சவுமியா சர்கார் 5 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 12 ரன்னிலும் அடுத்தடுத்து விரைவில் ஆட்டம் இழந்தனர். இதைத்தொடர்ந்து கேப்டன் ஷகிப் அல்-ஹசன், லிட்டான் தாசுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 10.5 ஓவர்களில் 102 ரன்னாக உயர்ந்த போது நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் லிட்டான் தாஸ் (61 ரன்கள், 32 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன்) ஆட்டம் இழந்தார். அடுத்து ஷகிப் அல்-ஹசன் 22 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 24 ரன் எடுத்து அவுட் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. மக்முதுல்லா 20 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ரன்னும், அரிபுல் ஹக் 16 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 18 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் பிராத்வெய்ட், கீமோ பால் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. ஆந்த்ரே ரஸ்செல் (47 ரன்கள், 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன்) அணியை சரிவில் மீட்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அவருக்கு மற்ற வீரர்கள் யாரும் பக்கபலமாக இருக்கவில்லை.

வெஸ்ட்இண்டீஸ் அணி 17.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்த இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை தொடர்ந்து நீடித்ததால் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி வங்காளதேச அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வங்காளதேச அணி தரப்பில் முஸ்தாபிஜூர் ரகுமான் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் வங்காளதேச அணி 12 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. வங்காளதேச அணி வீரர்கள் லிட்டான் தாஸ் ஆட்டநாயகன் விருதும், ஷகிப் அல்-ஹசன் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றி - தொடரை முழுமையாக கைப்பற்றியது
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.
2. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடு ஆகியோர் சதம் அடித்தனர்.
3. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்றது.