ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச அணி 143 ரன்னில் ஆல்-அவுட்


ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச அணி 143 ரன்னில் ஆல்-அவுட்
x
தினத்தந்தி 4 Nov 2018 10:00 PM GMT (Updated: 4 Nov 2018 7:16 PM GMT)

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், வங்காளதேச அணி 143 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

சியல்ஹெட்,

ஜிம்பாப்வே - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சியல்ஹெட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே தொடக்க நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 282 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி சொந்த ஊரில் தடுமாறியது. விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்த வங்காளதேச அணி 51 ஓவர்களில் 143 ரன்களில் அடங்கியது. அதிகபட்சமாக ஆரிபுல்ஹக் 41 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 31 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் சதரா, சிகந்தர் ராசா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அடுத்து 139 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே நேற்றைய முடிவில் விக்கெட் இழப்பின்றி ஒரு ரன் எடுத்துள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Next Story