கிரிக்கெட்

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச அணிக்கு 321 ரன்கள் இலக்கு + "||" + Test match against Zimbabwe: Bangladesh reach 321 runs target

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச அணிக்கு 321 ரன்கள் இலக்கு

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச அணிக்கு 321 ரன்கள் இலக்கு
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், வங்காளதேச அணிக்கு 321 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சியல்ஹெட்,

ஜிம்பாப்வே-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சியல்ஹெட்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 282 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 51 ஓவர்களில் 143 ரன்களில் சுருண்டது. இதனை அடுத்து 139 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி ஒரு ரன் எடுத்து இருந்தது.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்சில் 65.4 ஓவர்களில் 181 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் மசகட்ஜா 48 ரன்கள் சேர்த்தார். வங்காளதேச அணி தரப்பில் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டும், மெஹிதி ஹசன் மிராஜ் 3 விக்கெட்டும், நஜ்முல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 10.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் நேற்றைய ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. லிட்டான் தாஸ் 14 ரன்னுடனும், இம்ருல் கெய்ஸ் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. போதைக்கு எதிரான பிரசாரத்தில் சஞ்சய்தத்
போதைக்கு எதிரான பிரசாரத்தில் நடிகர் சஞ்சய்தத் ஈடுபட்டுள்ளார்.
2. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு - ஸ்டார்க், மிட்செல் மார்சுக்கு இடமில்லை
இந்தியாவுக்கு வந்து ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஸ்டார்க், மிட்செல் மார்சுக்கு இடம் கிடைக்கவில்லை.
3. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி மோசமான தோல்வி
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
4. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 366 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
5. துளிகள்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.