கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசை புரட்டியெடுத்தது: வங்காளதேச அணி இன்னிங்ஸ் வெற்றி + "||" + The West Indies have broken up: Bangladesh team innings win

வெஸ்ட் இண்டீசை புரட்டியெடுத்தது: வங்காளதேச அணி இன்னிங்ஸ் வெற்றி

வெஸ்ட் இண்டீசை புரட்டியெடுத்தது: வங்காளதேச அணி இன்னிங்ஸ் வெற்றி
டாக்காவில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை புரட்டியெடுத்த வங்காளதேச அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
டாக்கா,

வெஸ்ட் இண்டீஸ் - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 508 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது.


இந்த நிலையில் 3-வது நாளான நேற்றும் வங்காளதேசத்தின் சுழல் ஜாலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் விழிபிதுங்கினர். 36.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 111 ரன்களில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. வங்காளதேசத்திற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர்கள் மெஹதி ஹசன் மிராஸ் 7 விக்கெட்டுகளும், ஷகிப் அல்-ஹசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் முதல்முறையாக வங்காளதேச அணி, எதிரணிக்கு ‘பாலோ-ஆன்’ வழங்கியது. இதையடுத்து 397 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி மறுபடியும் விக்கெட்டுகளை மளமளவென தாரைவார்த்தது. ஊசலாட்டத்துக்கு மத்தியில் ஹெட்மயர் (93 ரன், 92 பந்து, ஒரு பவுண்டரி, 9 சிக்சர்) சிக்சர் மழை பொழிந்தது மட்டுமே வெஸ்ட் இண்டீசுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் ஆகும்.

2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 59.2 ஓவர்களில் 213 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி இமாலய வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்காளதேச அணி இன்னிங்ஸ் வெற்றியை ருசிப்பது இதுவே முதல் முறையாகும். 2-வது இன்னிங்சில் மெஹதி ஹசன் 5 விக்கெட்டுகளும், தைஜூல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.

இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்ட சில சாதனை விவரம் வருமாறு:-

*இரண்டு டெஸ்டிலும் வெஸ்ட் இண்டீசின் 40 விக்கெட்டுகளையும் வங்காளதேசத்தின் சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றினர். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எதிரணியின் 40 விக்கெட்டுகளையும் முழுமையாக சுழற்பந்து வீச்சாளர்கள் கபளகரம் செய்தது இதுவே முதல் முறையாகும்.

*மெஹதி ஹசன் இந்த டெஸ்டில் மொத்தம் 117 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுகளை அள்ளினார். வங்காளதேச பவுலரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

*வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயர் 2-வது இன்னிங்சில் 9 சிக்சர்கள் நொறுக்கினார். இதன் மூலம் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிறிஸ் கெய்லின் சாதனையை (2010-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 333 ரன்கள் குவித்த போது 9 சிக்சர் அடித்திருந்தார்) சமன் செய்தார்.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் வருகிற 9-ந்தேதி டாக்காவில் நடக்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை ஆக்கியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து - மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது பெல்ஜியம்
உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான அரைஇறுதியில் நெதர்லாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 6-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது.
2. கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்
கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒரு நாள் தொடரை வங்காளதேச அணி கைப்பற்றியது.
3. துளிகள்
வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது.
4. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வங்காளதேச அணி 508 ரன்கள் குவிப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், வங்காளதேச அணி 508 ரன்கள் குவித்துள்ளது.
5. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேசம் 259 ரன்கள் சேர்ப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வங்காளதேசம் 259 ரன்கள் சேர்த்தது.