கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் 185 ரன்னில் சுருண்டது + "||" + Test against South Africa: Pakistan 185 runs

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் 185 ரன்னில் சுருண்டது

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் 185 ரன்னில் சுருண்டது
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 185 ரன்னில் சுருண்டது.
ஜோகன்னஸ்பர்க், 

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில், 2-வது நாளான நேற்று முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி, வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 49.4 ஓவர்களில் 185 ரன்னில் சுருண்டது. நடப்பு தொடரில் அந்த அணி 200 ரன்களுக்குள் அடங்குவது இது 4-வது முறையாகும். அதிகபட்சமாக கேப்டன் சர்ப்ராஸ் அகமது 50 ரன்கள் எடுத்தார். தென்ஆப்பிரிக்க தரப்பில் டுன்னே ஆலிவர் 5 விக்கெட்டுகளும், பிலாண்டர் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அடுத்து 77 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து மொத்தம் 212 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. அம்லா (42 ரன்), குயின்டான் டி காக் (34 ரன்) களத்தில் உள்ளனர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.