கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் - ஐ.சி.சி. உறுதி + "||" + The Indian team will be given the right defense in the World Cup - ICC Confirmed

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் - ஐ.சி.சி. உறுதி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் - ஐ.சி.சி. உறுதி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என ஐ.சி.சி. உறுதி அளித்துள்ளது.
துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ‘இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினர், போட்டி அதிகாரிகள் மற்றும் இந்திய ரசிகர்களுக்கு உயரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு ஐ.சி.சி.யின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் பதில் அளிக்கையில், ‘இந்திய அணியினர் உள்பட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்’ என்று உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பதவி காலம் நீட்டிக்கப்படாது
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பதவி காலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி தெரிவித்தார்.
2. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி தேர்வில் ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், ரஹானே கருத்தில் கொள்ளப்படுவார்கள் தேர்வு குழு தலைவர் பேட்டி
‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி தேர்வில் ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், ரஹானே பெயர் கருத்தில் கொள்ளப்படும்’ என்று இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.
3. ‘வீரர்கள் மனைவியை உடன் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும்’ - விராட்கோலி வேண்டுகோள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, வீரர்கள் மனைவியை உடன் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று விராட்கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.