புல்வாமா தாக்குதல்: பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை கொடுக்க முடிவு


புல்வாமா தாக்குதல்: பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை கொடுக்க முடிவு
x
தினத்தந்தி 20 March 2019 11:30 PM GMT (Updated: 20 March 2019 10:18 PM GMT)

புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. ரூ.1,300-ல் இருந்து ரூ.6,500 வரையிலான விலைகளில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

இந்த நிலையில் ஐ.பி.எல். முதலாவது ஆட்டத்தின் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கிறார். நலநிதிக்கான காசோலையை அவர் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐ.பி.எல். தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு அதற்கு செலவாகும் தொகை ரூ.20 கோடி, பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story