கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது + "||" + Against Pakistan 3rd one day cricket: The Australian team is a great success

பாகிஸ்தானுக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது

பாகிஸ்தானுக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது
ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்தது.

அபுதாபி, 

ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 90 ரன்னும் (136 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), மேக்ஸ்வெல் 71 ரன்னும் (55 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு பவுண்டரியுடன்) எடுத்தனர். பின்னர் 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.4 ஓவர்களில் 186 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்–ஹக் 46 ரன்னும், இமாத் வாசிம் 43 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3–0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று (மாலை 4.30 மணி) நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிற பாகிஸ்தானுக்கு ரூ.9,360 கோடி அவசர கடன் - ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது
நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிற பாகிஸ்தானுக்கு அவசர கடன் உதவியாக ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.9,360 கோடி வழங்குகிறது.
2. இந்தி பாடலை பாடிய டோனி; சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகிறது
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டோனி, நிகழ்ச்சி ஒன்றில் இந்தி பாடலை பாடியது சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகி வருகிறது.
3. பாகிஸ்தானைச் சேர்ந்த 629 இளம் பெண்கள் சீனாவிற்கு கடத்தி பாலியல் தொழிலுக்கு விற்பனை
பாகிஸ்தானைச் சேர்ந்த 629 இளம் பெண்கள் சீனாவில் உள்ள ஆண்களை மணப்பதற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
4. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5. பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.