கிரிக்கெட்

கோலிக்கு மண்ணை அனுப்பி ஆசீர்வதிக்கும் பள்ளி + "||" + Virat Kohli's school sending soil to London as blessing

கோலிக்கு மண்ணை அனுப்பி ஆசீர்வதிக்கும் பள்ளி

கோலிக்கு மண்ணை அனுப்பி ஆசீர்வதிக்கும் பள்ளி
கோலிக்கு மண்ணை அனுப்பி, அவருக்கு ஆசீர்வதிக்கும் வகையில் பள்ளி அதனை வழங்க உள்ளது.
புதுடெல்லி,

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி விராட் கோலியின் தலைமையில் பங்கேற்றுள்ளது. கபில்தேவ், டோனியின் வழியில் கோலியும் உலக கோப்பையை கையில் ஏந்துவாரா? என்று ரசிகர்கள் பேராவல் கொண்டுள்ளனர்.


விராட் கோலி டெல்லியைச் சேர்ந்தவர். அவர் தனது தொடக்க கல்வியை டெல்லியில் உத்தம்நகரில் உள்ள விஷால் பார்தி பப்ளிக் பள்ளியில் படித்தார். இங்கிருந்து தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பித்தது. உலக கோப்பையில் கோலி சாதிக்க வேண்டும் என்று வாழ்த்தி அவரை ஆசீர்வதிக்கும் வகையில் இந்த பள்ளி நிர்வாகம் அவர் விளையாடிய மைதானத்தில் இருந்து மண்ணை எடுத்து லண்டனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் செய்துள்ளது.