கிரிக்கெட்

டோனி ஒரு லெஜண்ட்: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி + "||" + "One Off Day And Everyone Starts Talking": Virat Kohli Comes To MS Dhoni's Defence

டோனி ஒரு லெஜண்ட்: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி

டோனி ஒரு லெஜண்ட்: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி
டோனியின் ஆட்டத்திறன் பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர்,

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.  இந்தப்போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. 

முன்னதாக,  இந்தப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி விராட் கோலி (76 ரன்கள்) மற்றும் டோனி (61 பந்துகளில் 56 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்ட்த்தால் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் சேர்த்தது.  ஆட்ட நாயகன் விருதை கேப்டன் கோலி பெற்றார். 

போட்டி முடிந்த பிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மூத்த வீரர் டோனிக்கு ஆதரவாக பேசினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மந்தமாக விளையாடி கடும் விமர்சனத்துக்கு டோனி, உள்ளாக்கப்பட்ட நிலையில்,  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பொறுப்பாக விளையாடி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பரிசளிப்பு விழாவில் பேசியதாவது:- “ நடு வரிசையில், தான் என்ன செய்ய வேண்டும் என்பதை டோனி உணர்ந்து இருக்கிறார்.  ஒரே ஒரு ஆட்டம் டோனிக்கு மோசமானதாக அமைந்தால், உடனடியாக அனைவரும் பேச  துவங்கி விடுகின்றனர். ஆனால், நாங்கள் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருக்கிறோம். 

பல போட்டிகளில் எங்களுக்கு டோனி வெற்றியைத் தேடி தந்துள்ளார்.  டோனியின் அனுபவம் 10-ல் 8 முறை எங்களுக்கு நல்லதாகவே முடிந்துள்ளது. ஆட்டத்தை புரிந்து கொள்வதில் டோனி வல்லவர்.  எங்களுக்கு எப்போதும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பார்.  ஆட்டத்தில் டோனி ஒரு லெஜண்ட். நாங்கள் அனைவரும் அதை அறிவோம்” என்றார்.