கிரிக்கெட்

2-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை + "||" + Sri Lanka defeated Bangladesh by 2-0 in the second game

2-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை

2-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை
2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.
கொழும்பு,

இலங்கை - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 117 ரன்களுடன் தத்தளித்த வங்காளதேச அணியை விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் (98 ரன், 110 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) சிறப்பாக ஆடி கவுரவமான நிலைக்கு கொண்டு சென்றார். முன்னதாக ரஹிம் 8 ரன் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வங்காளதேச வீரர் என்ற சிறப்பை பெற்றார். அடுத்து களம் கண்ட இலங்கை அணி 44.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு    242 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவிஷ்கா பெர்னாண்டோ (82 ரன்), மேத்யூஸ் (52 ரன்) அரைசதம் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சொந்த மண்ணில் இலங்கை அணி 44 மாதங்களுக்கு பிறகு வென்ற முதல் தொடர் இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. வங்கதேசம் அத்துமீறி தாக்குதல்: இந்திய பாதுகாப்பு படை வீரர் பலி
வங்கதேச பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
2. இந்தியா-வங்காளதேசம் இடையே 7 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா மற்றும் வங்காளதேசத்திற்கு இடையே இன்று 7 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
3. புரோ கபடி: பாட்னாவிடம் பணிந்தது புனே
புரோ கபடி போட்டியில், பாட்னா அணி 55-33 என்ற புள்ளிக்கணக்கில் புனே அணியை வீழ்த்தியது.
4. ஆசிய கைப்பந்து: இந்தியா தோல்வி
ஆசிய கைப்பந்து போட்டியில், சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
5. புரோ கபடி: பெங்கால் அணியிடம் மும்பை தோல்வி
புரோ கபடி போட்டியில், பெங்கால் அணியிடம் மும்பை அணி தோல்வியடைந்தது.