கிரிக்கெட்

இந்திய பெண்ணை திருமணம் செய்கிறார், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி + "||" + Marries Indian woman, Pakistan cricketer Hasan Ali

இந்திய பெண்ணை திருமணம் செய்கிறார், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி

இந்திய பெண்ணை திருமணம் செய்கிறார், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளார் ஹசன் அலி.

மும்பை, 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளார் ஹசன் அலி. இவர் பாகிஸ்தான் அணிக்காக 9 டெஸ்ட், 53 ஒரு நாள் மற்றும் 30 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 25 வயதான ஹசன் அலி இந்திய பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணின் பெயர் ‌ஷமியா அர்ஜூ. அரியானாவைச் சேர்ந்த ‌ஷமியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றுவதோடு தற்போது பெற்றோருடன் துபாயில் வசித்து வருகிறார்.

‌ஷமியாவை தனது நண்பர் மூலம் ஹசன் அலி துபாயில் முதல் முறையாக சந்தித்து இருக்கிறார். அதன் பிறகு அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது இப்போது திருமணம் பந்தத்தில் முடிகிறது. இவர்களது திருமணம் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வருகிற 20–ந்தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் திருமண தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், இரு குடும்பத்தினர் சந்தித்து பேசி அது பற்றி முடிவு செய்ததும் வெளிப்படையாக தெரிவிப்பேன் என்றும் ஹசன் அலி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்திய பெண்ணை கரம்பிடிப்பது இது ஒன்றும் புதிதல்ல. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்தார். இதே போல் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஜாகீர் அப்பாஸ், மொசின் ஹசன் கான் ஆகியோரும் இந்தியாவைச் சேர்ந்த பெண்களையே திருமணம் செய்திருக்கிறார்கள்.