முன்னாள் கேப்டன் சாதனையை சமன் செய்வாரா? இந்நாள் கேப்டன்


முன்னாள் கேப்டன் சாதனையை சமன் செய்வாரா? இந்நாள் கேப்டன்
x
தினத்தந்தி 20 Aug 2019 3:28 PM GMT (Updated: 20 Aug 2019 3:28 PM GMT)

இந்திய அணியில் கேப்டனாக, டோனியின் சாதனையை விராட் கோலி சமன் செய்ய உள்ளார்.

இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை அன்று தொடங்க உள்ளது. 

இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில்  இந்தியா வெற்றிபெற்றால்விராட் கோலி,எம்.எஸ். டோனியின் சாதனையை சமன் செய்வார். அதாவது எம்.எஸ். டோனி தலைமையில் இந்திய அணி 60 போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி இதுவரை 46 போட்டிகளில் 26  போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

எனவே இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 27-வது வெற்றி உடன், கேப்டனாக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் எம்.எஸ். டோனியின் சாதனையை  விராட் கோலி சமன் செய்வார்.

விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக  கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மேலும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மண்ணில் தொடரை இழந்த இந்திய அணி முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது.

Next Story