கிரிக்கெட்

தேசிய விளையாட்டு தினம்: கேதர் ஜாதவுடன் கோல்ப் விளையாடிய டோனி + "||" + MS Dhoni Plays Golf With Kedar Jadhav On National Sports Day

தேசிய விளையாட்டு தினம்: கேதர் ஜாதவுடன் கோல்ப் விளையாடிய டோனி

தேசிய விளையாட்டு தினம்: கேதர் ஜாதவுடன் கோல்ப் விளையாடிய டோனி
இந்திய அணி வீரர் டோனி, கேதர் ஜாதவுடன் கோல்ப் விளையாடும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் டோனி, உலக கோப்பை தொடருக்கு பின் அவரின் ஓய்வு தொடர்பாக  பல்வேறு விதமான கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்தன. ஆனால்  தற்போது வரை ஓய்வு குறித்து எந்த வித அதிகாரப்பூர்வமான தகவலையும் டோனி தெரிவிக்கவில்லை. மேலும் சில நாட்களுக்கு  முன் டோனி ராணுவத்தில் இணைந்து பணியாற்றினார்.

இந்நிலையில் டோனி தற்போது இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான கேதர் ஜாதவ் உடன் அமெரிக்காவில் உள்ள ஒரு கிளப்பில் கோல்ப் விளையாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை கேதார் ஜாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். 

மேலும் அதில், அனைவருக்கு தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்கள் என்று கேதர் ஜாதவ் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவானது தற்போது டோனி ரசிகர்கள் இடையே மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. டோனி, பிளிஸ்சிஸ் ஆகியோரில் வசீகரமானவர் யார்? - இம்ரான் தாஹிர் பதில்
டோனி, பிளிஸ்சிஸ் ஆகியோரில் வசீகரமானவர் யார் என்பது குறித்து இம்ரான் தாஹிர் பதில் அளித்துள்ளார்.
2. மனநல ஆலோசகர் எப்போதும் தொடர்ந்து அணியுடன் இருக்க வேண்டும் - டோனி
மனநல ஆலோசகர் எப்போதும் தொடர்ந்து அணியுடன் இருக்க வேண்டும் என்று டோனி கூறியுள்ளார்.
3. டோனி எனக்கு ஒரு சிறந்த ஆலோசகர் - ரிஷாப் பண்ட்
கிரிக்கெட் களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் டோனி எனக்கு ஒரு ஆலோசகர் போல் உதவியுள்ளார் என ரிஷாப் பண்ட் தெரிவித்துள்ளார்.
4. பண்ணை வீட்டில் மகளை உற்சாகப்படுத்த பைக்கில் சுற்றி வரும் டோனி!
பண்ணை வீட்டில் டோனி, மகள் ஸிவா உடன் பைக்கில் சுற்றி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
5. டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது எளிதல்ல - அசாருதீன் பேட்டி
டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது எளிதல்ல என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்துள்ளார்.