இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது நியூசிலாந்து


இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது நியூசிலாந்து
x
தினத்தந்தி 4 Sep 2019 12:09 AM GMT (Updated: 4 Sep 2019 12:09 AM GMT)

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

பல்லகெலே,

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்துக்கு 38 ரன்னுக்குள் 3 விக்கெட் சரிந்தாலும் கிரான்ட்ஹோமும் (59 ரன்), டாம் புரூசும் (53 ரன்) அணியை காப்பாற்றினர். நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.

Next Story