கிரிக்கெட்

‘பும்ரா மேலும் பல ஹாட்ரிக் சாதனை படைப்பார்’ - இர்பான் பதான் சொல்கிறார் + "||" + Bumrah will many more hat-tricks Records - Says Irfan Pathan

‘பும்ரா மேலும் பல ஹாட்ரிக் சாதனை படைப்பார்’ - இர்பான் பதான் சொல்கிறார்

‘பும்ரா மேலும் பல ஹாட்ரிக் சாதனை படைப்பார்’ - இர்பான் பதான் சொல்கிறார்
பும்ரா மேலும் பல ஹாட்ரிக் சாதனை படைப்பார் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் கூறினார்.
கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். ஹாட்ரிக் சாதனை படைத்த 3-வது இந்தியர் பும்ரா ஆவார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். இந்த நிலையில் பும்ராவுக்கு, இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சாதனையாளர்களில் ஒருவருமான இர்பான் பதான் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் கூறியதாவது:-


இந்திய அணியில் மிகவும் முக்கியமான வீரராக பும்ரா இருப்பதாக நம்புகிறேன். அவர் விளையாடாத போது, அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். அந்த அளவுக்கு அணியில் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக திகழ்கிறார். பும்ரா போன்ற வீரரால் இந்திய அணி ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. பும்ராவினால் மூன்று வடிவிலான போட்டிகளிலும் வெற்றிகரமாக செயல்பட முடியும். ஆனால் அவரை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். பும்ரா இந்த ஹாட்ரிக் சாதனையுடன் நின்று விட மாட்டார். இன்னும் அதிகமான ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்துவார். இவ்வாறு இர்பான் பதான் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை!
குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் பும்ரா!
2. ஒரு கையை சங்கிலியால் கட்டியபடி கடலில் 7½ கி.மீ.தூரம் நீந்தி சாதனை படைத்த நாகை மாணவர்
ஒரு கையை சங்கிலியால் கட்டியபடி கடலில் 7½ கிலோ மீட்டர் தூரம் நீந்தி நாகை மாணவர் சாதனை படைத்துள்ளார்.
3. பிறந்து 3 நாட்கள் ஆன குழந்தை வயிற்றில் இருந்த நீர்க்கட்டி அகற்றம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
பிறந்து 3 நாட்கள் ஆன பச்சிளம் பெண் குழந்தையின் வயிற்றில் இருந்த கட்டியை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அகற்றி சாதனை படைத்தனர்.
4. உலகின் மிக நீளமுள்ள சாண்ட்விச்சை தயாரித்து மெக்சிகோவில் சாதனை
உலகில் மிக நீளமுள்ள சாண்ட்விச்சை தயாரித்து மெக்சிகோவில் சாதனை செய்யப்பட்டு உள்ளது.
5. உலக நீச்சல் போட்டியில் பெல்ப்சின் சாதனையை முறியடித்த ஹங்கேரி வீரர்
உலக நீச்சல் போட்டியில் பெல்ப்சின் சாதனையை ஹங்கேரி வீரர் கிறிஸ்டோப் மிலாக் முறியடித்தார்.