கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான் + "||" + Test against Bangladesh: Afghanistan in strong position

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான்
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது.
சட்டோகிராம்,

வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 342 ரன்கள் குவித்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 2-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.


இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 205 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து 137 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்த்துள்ளது. 17 வயதான அறிமுக வீரர் இப்ராஹிம் ஜட்ரன் (87 ரன், 6 பவுண்டரி, 4 சிக்சர்), முன்னாள் கேப்டன் அஸ்ஹார் ஆப்கன் (50 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதுவரை மொத்தம் 374 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.


தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை இந்தியா வழங்கியது
வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை இந்தியா வழங்கி உள்ளது.
2. வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம்
வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம் அடைந்தார்.
3. வங்காளதேசத்தில் ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. வங்காளதேசத்தில் கழிவுநீர் தொட்டி வெடித்து கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி
வங்காளதேசத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் கழிவுநீர் தொட்டி வெடித்து கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியாகினர்.
5. ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: வலுவான நிலையில் குஜராத் அணி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் வலுவான நிலையில் குஜராத் அணி உள்ளது.