கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி வெற்றியுடன் தொடக்கம் + "||" + Vijay Hazare Cup Cricket: Start with Tamil Nadu team victory

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி வெற்றியுடன் தொடக்கம்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி வெற்றியுடன் தொடக்கம்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது.
ஜெய்ப்பூர்,

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நேற்று பல்வேறு நகரங்களில் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 22 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. தமிழக அணி ‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கிறது. தமிழக அணி தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை ஜெய்ப்பூரில் சந்தித்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 9 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்தது. தமிழகம் தரப்பில் கே.விக்னேஷ் 3 விக்கெட்டுகளும், முகமது, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.


அடுத்து களம் இறங்கிய தமிழக அணி 48 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 262 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபினவ் முகுந்த் (75 ரன்), பாபா அபராஜித் (52 ரன்), கேப்டன் தினேஷ் கார்த்திக் (52 ரன், நாட்-அவுட்) அரைசதம் அடித்தனர்.

முதல் நாளில் மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக 6 லீக் ஆட்டங்கள் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதில் மும்பை-சவுராஷ்டிரா (ஏ பிரிவு), டெல்லி-விதர்பா (பி பிரிவு) ஆகிய ஆட்டங்களும் அடங்கும்.


தொடர்புடைய செய்திகள்

1. 2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.
2. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனிக்கு பிரதமர் மோடி கடிதம்
தோனியின் ஓய்வு முடிவு 130 கோடி மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3. ஓய்வு அறிவிப்பு: தோனியின் மனைவி சாக்‌ஷி உருக்கம்
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தோனி நேற்று அறிவித்தார்.
4. எளிதில் அசைக்க முடியாத தோனியின் 5 முக்கிய சாதனைகள் !
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வு அறிவிப்பை நேற்று அறிவித்தார்.
5. டோனி ஓய்வு குறித்து மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட ரகசியம்
டோனியின் ஓய்வு குறித்த பேச்சு கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.