கிரிக்கெட்

இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா? கங்குலி பதில் + "||" + You have to ask Modi ji and Pakistan PM’: Sourav Ganguly on India-Pakistan cricketing ties

இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா? கங்குலி பதில்

இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா? கங்குலி பதில்
இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கங்குலி பதில் அளித்துள்ளார்.
கொல்கத்தா,

பிசிசிஐ தலைவராக தேர்வாகியுள்ள சவுரவ் கங்குலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா? என்பது பற்றி கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதில் அளித்த கங்குலி, “ இந்த விவகாரம் என் கையில் இல்லை.  இந்தக் கேள்வியை பிரதமர் மோடியிடமும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமும் கேட்க வேண்டும்.

நமக்கு இதில் ஆர்வம் இருந்தாலும், சர்வதேச அளவில் மற்றொரு நாட்டுக்குப் பயணிக்க அரசுகளின் அனுமதி மிகவும் அவசியம். இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை"  என்றார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதன்பிறகு இருநாடுகளுக்கு இடையேயான  நேரடி தொடர் தற்போது வரை நடைபெற வில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் ‘பிரிக்ஸ்’ நீர்வள மந்திரிகள் மாநாடு - பிரதமர் மோடி யோசனை
‘பிரிக்ஸ்’ நீர்வள மந்திரிகளின் முதல் மாநாட்டை இந்தியாவில் நடத்த பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார்.
2. அரசியலிலும் கிரிக்கெட்டிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் -நிதின் கட்கரி
அரசியலிலும் கிரிக்கெட்டிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
3. வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி முதலில் பந்து வீச்சு
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்து வீசி வருகிறது.
4. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரேசில் அதிபர்
இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
5. இந்தியா-வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று தொடங்குகிறது.