கிரிக்கெட்

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து + "||" + First 20-over cricket: England beat New Zealand

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து
முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
கிறைஸ்ட்சர்ச்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடரில் முதலாவது ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 44 ரன்கள் எடுத்தார்.


தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜேம்ஸ் வின்ஸ் 59 ரன்களும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), பேர்ஸ்டோ 35 ரன்களும், கேப்டன் மோர்கன் 34 ரன்களும் எடுத்தனர். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நாளை நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதியில் ரத்து
முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
2. முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்திடம் தோற்றது இந்தியா
டெல்லியில் நேற்று நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
3. முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இன்று மோதல்
முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ளன.
4. முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.