கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி நிதான ஆட்டம் + "||" + Tests against England: South African Team Leisurely play

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி நிதான ஆட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி நிதான ஆட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடி வருகிறது.
போர்ட் எலிசபெத்,

இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 499 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பென் ஸ்டோக்ஸ் 120 ரன்னும், ஆலிவர் போப் ஆட்டம் இழக்காமல் 135 ரன்னும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி நிதானமாக ஆடினாலும் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 82 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. குயின்டான் டி காக் 63 ரன்னுடனும், பிலாண்டர் 27 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் பெஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘தோல்வியில் இருந்து கற்றுக் கொண்டு சவாலுக்கு தயாராக உள்ளோம்’ - இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி
நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் 2-வது டெஸ்டில் சவாலை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயாராக இருப்பதாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
2. ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி 560 ரன்கள் குவிப்பு
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி 560 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சார்பில் முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதம் அடித்தார்.
3. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி ‘திரில்’ வெற்றி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி ‘திரில்’ வெற்றிபெற்றது.
4. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 165 ரன்களில் “ஆல் அவுட்”
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 165 ரன்களில் “ஆல் அவுட்” ஆனது.
5. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.