கிரிக்கெட்

விக்கெட் கீப்பிங் பணியை நான் மிகவும் விரும்புகிறேன் - லோகேஷ் ராகுல் + "||" + I love the wicketkeeping task - Lokesh Rahul

விக்கெட் கீப்பிங் பணியை நான் மிகவும் விரும்புகிறேன் - லோகேஷ் ராகுல்

விக்கெட் கீப்பிங் பணியை நான் மிகவும் விரும்புகிறேன் - லோகேஷ் ராகுல்
விக்கெட் கீப்பிங் பணியை மிகவும் விரும்புவதாக இந்திய வீரர் லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.
ஆக்லாந்து,

விக்கெட் கீப்பிங் பணியை தான் மிகவும் விரும்புவதாக இந்திய வீரர் லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “உண்மையை சொல்ல வேண்டும் என்றால் விக்கெட் கீப்பிங் பணியை நான் மிகவும் விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் வேண்டும் என்றால் நான் விக்கெட் கீப்பராக செயல்படுவது உங்களுக்கு புதிதாக தெரியலாம். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எனது அணிக்காக 3-4 ஆண்டுகளாக விக்கெட் கீப்பிங் பணியை செய்கிறேன். முதல்தர கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பராக இருக்கிறேன். அத்துடன் தொடக்க ஆட்டக்காரராகவும் ஆடுகிறேன். விக்கெட் கீப்பிங் பொறுப்பை ரசித்து அனுபவித்து செய்கிறேன். ஆடுகளத்தன்மை எப்படி இருக்கிறது என்பது பற்றி பவுலர்களுக்கும், அதற்கு ஏற்ப பீல்டிங் அமைப்பது குறித்து கேப்டனுக்கும் யோசனைகளை வழங்குகிறேன். விக்கெட் கீப்பராக இருக்கும் போது, அது எனது பேட்டிங்குக்கும் உதவிகரமாக இருக்கிறது” என்று லோகேஷ் ராகுல் கூறினார்.