கிரிக்கெட்

நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா விலகல் + "||" + New Zealand Test Series: Indian player Hardik Pandya quit

நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா விலகல்

நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா விலகல்
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து, இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா விலகினார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆபரேஷன் செய்து சிகிச்சை பெற்றார்.

கடந்த 6 மாதமாக எந்த போட்டியிலும் பங்கேற்காத ஹர்திக் பாண்ட்யா வருகிற 21-ந் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக முழு உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விலகி உள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமி பிசியோதெரபிஸ்ட் ஆஷிஷ் கவுசிக்குடன் இணைந்து, அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஜேம்ஸ் அலிபோனை லண்டனுக்கு சென்று சந்தித்து ஆலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா முழு உடல் தகுதியை பெறுவதற்கான பயிற்சிகளை தேசிய கிரிக்கெட் அகாடமியில் மேற்கொள்வார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சாய் பயிற்சி மையத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் பயிற்சியை தொடங்கினர்
சாய் பயிற்சி மையத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று தங்களது பயிற்சியை தொடங்கினர்.
2. ஆசிய மல்யுத்தம்: இந்திய வீரர் ஜிதேந்தருக்கு வெள்ளிப்பதக்கம்
ஆசிய மல்யுத்த போட்டியில், இந்திய வீரர் ஜிதேந்தருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
3. ஆசிய மல்யுத்தம்: இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று சாதனை
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.
4. மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.