கொரோனாவால் பாதிக்கப்படுபவருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்த ஐ.சி.சி. அனுமதி + "||" + ICC bans use of saliva on ball; allows Covid-19 replacements in Tests among other interim changes
கொரோனாவால் பாதிக்கப்படுபவருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்த ஐ.சி.சி. அனுமதி
கொரோனாவால் பாதிக்கப்படுபவருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்த ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது. மேலும் பந்தை எச்சிலால் தேய்த்தால் தண்டனை என்றும் ஐ.சி.சி அறிவித்துள்ளது.
துபாய்,
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஆடும் லெவன் அணியில் இடம் பெற்றுள்ள வீரர் யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்த ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக கமிட்டி நேற்று அனுமதி அளித்தது. எத்தகைய வீரர் (பவுலர் அல்லது பேட்ஸ்மேன்) பாதிக்கப்படுகிறாரோ அதற்கு ஏற்ற மாற்று வீரரையே பயன்படுத்த வேண்டும். 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
எச்சில் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் பந்து மீது எச்சிலை தேய்க்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கும் ஐ.சி.சி. ஒப்புதல் அளித்துள்ளது. இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் இது அமல்படுத்தப்படும். தடையையும் மீறி பந்தை பளபளப்பு செய்ய எச்சிலால் தேய்த்தால் இன்னிங்சில் இரண்டு முறை எச்சரிக்கை விடுக்கப்படும். அதன் பிறகும் தொடர்ந்து எச்சிலை பந்து மீது தேய்த்துக் கொண்டே இருந்தால் சம்பந்தப்பட்ட அணியின் பவுலரை தண்டிக்கும் விதமாக பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன் பெனால்டியாக வழங்கப்படும். டெஸ்ட் போட்டிகளில் தற்காலிகமாக உள்ளூர் நடுவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பரிசோதனைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியது.