கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி வெல்லும் ; இன்ஜமாம் நம்பிக்கை + "||" + Pakistan better team than England, can still win the series: Inzamam-ul-Haq

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி வெல்லும் ; இன்ஜமாம் நம்பிக்கை

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி வெல்லும் ; இன்ஜமாம் நம்பிக்கை
இங்கிலாந்தை விட பாகிஸ்தான் அணி சிறப்பானது என்று நான் நினைக்கிறேன் என இன் ஜமாம் தெரிவித்துள்ளார்.
லாகூர், 

மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்த போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நாளை மறுநாள் தொடங்குகிறது. 

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடர் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்ஹக் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்தை விட பாகிஸ்தான் அணி சிறப்பானது என்று நான் நினைக்கிறேன். முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்று இருக்க வேண்டும். '

நல்ல நிலையில் இருந்து பாகிஸ்தான் அணி தோல்வி கண்டது ஏமாற்றம் அளித்தது. பாகிஸ்தான் அணியால் இன்னும் தொடரை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். கடினமான தருணத்தில் அணியினரின் உத்வேகத்தில் மாற்றம் ஏற்படக்கூடாது. 2-வது இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பியதால் பாகிஸ்தான் அணியினர் நெருக்கடிக்கு ஆளானார்கள். 

இதுபோன்ற தோல்வியினால் அணி வீரர்களின் உத்வேகம் குறையத்தான் செய்யும். ஆனால் அணி நிர்வாகத்தினர், வீரர்கள் எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையை எடுத்து கூறி நம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை: புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் - போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் இருப்பதாகவும் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை - மத்திய இணை அமைச்சர்
கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை என்று மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்து உள்ளார்.
3. குல்பூஷண் ஜாதவ் வழக்கு : பாகிஸ்தான் அவசர சட்டம் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு
மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு தொடர்பாக அவசர சட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் நீட்டித்துள்ளது.
4. பாகிஸ்தானில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐந்து மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
5. ஐ.எஸ் அமைப்பின் 85 மைல் தூர குகையை ஏவுகணை வீசி தாக்கி அழித்த இங்கிலாந்து விமானப்படை
ஐ.எஸ் அமைப்பின் 85 மைல் தூர குகையை ஏவுகணை கொண்டு இங்கிலாந்து விமானப்படை தாக்கி அழித்து உள்ளது.