கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் தள்ளிவைப்பு + "||" + Postponement of Indian Cricket Board General Body Meeting

இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் தள்ளிவைப்பு

இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் தள்ளிவைப்பு
இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியம், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விதிமுறைப்படி ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் காலரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான கால அவகாசத்தை 3 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசின் பதிவுத்துறை அனுமதி அளித்து இருக்கிறது. அதாவது இந்த (செப்டம்பர்) மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தை ஆன்-லைன் மூலம் நடத்தக்கூடாது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் தேதி குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொதுக்குழு கூட்டம்
பாபநாசத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழில்நுட்ப பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
2. தேர்தல் காரணமாக சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு
சட்டமன்ற தேர்தல் காரணமாக பெரிய பட்ஜெட் படங்களை திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்.
3. பா.ம.க. சார்பில் பொதுக்குழு கூட்டம்
பா.ம.க. சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
4. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீட்டின்படி வழங்கப்படாத பணியிடங்களை முழுமையாக கண்டறிந்து சிறப்பு தேர்வு மூலம் பூர்த்தி செய்ய வேண்டும்
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு வழங்கப்படாத பணியிடங்களை முழுமையாக கண்டறிந்து சிறப்பு ேதர்வு மூலம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பு எதிரொலி மும்பை, தானேயில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதன் காரணமாக மும்பை, தானேயில் பள்ளிகள் திறப்பு டிசம்பர் 31-ந் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.