கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஜீப் மரணம் + "||" + Afghanistan cricketer Najeeb dies

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஜீப் மரணம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஜீப் மரணம்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஜீப் கார் மோதியதில் மரணம் அடைந்துள்ளார்.
காபுல்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் நஜீப் தரகாய் (வயது 29) கடந்த வாரம் அங்குள்ள கடையில் பொருட்கள் வாங்க சாலையை கடந்த போது கார் மோதி படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நினைவு திரும்பாமலேயே நேற்று மரணம் அடைந்தார். நஜீப் ஆப்கானிஸ்தான் அணிக்காக 12 இருபது ஓவர் போட்டி மற்றும் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். அத்துடன் 24 முதல் தர போட்டியில் ஆடி 6 சதம், 10 அரைசதம் உள்பட 2,030 ரன்கள் எடுத்துள்ளார். அவரது மறைவுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல பாடகியின் மகன் இளம் இசையமைப்பாளர் மரணம்
பிரபல பாடகியின் மகனான இளம் இசையமைப்பாளர் மரணம் அடைந்துள்ளார்.
2. பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்
பிரபல ஹாலிவுட் நடிகை மரணம் அடைந்துள்ளார்.