கிரிக்கெட்

‘டெஸ்ட் போட்டிக்கு திரும்ப முன்னுரிமை அளிப்பேன்’ புவனேஷ்வர்குமார் பேட்டி + "||" + ‘I will give priority to returning to Test cricket’ Bhuvneshwar Kumar interview

‘டெஸ்ட் போட்டிக்கு திரும்ப முன்னுரிமை அளிப்பேன்’ புவனேஷ்வர்குமார் பேட்டி

‘டெஸ்ட் போட்டிக்கு திரும்ப முன்னுரிமை அளிப்பேன்’ புவனேஷ்வர்குமார் பேட்டி
கடந்த 2 ஆண்டுகளாக காயத்தில் அடிக்கடி சிக்கி வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
புனே, 

கடந்த 2 ஆண்டுகளாக காயத்தில் அடிக்கடி சிக்கி வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த புவனேஷ்வர்குமார் அடுத்து ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.

இந்த நிலையில் 31 வயது புவனேஷ்வர் குமார் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்பது தான் எனது முன்னுரிமையாகும். அதனை மனதில் கொண்டு தான் என்னை தயார்படுத்தி வருகிறேன். டெஸ்ட் போட்டிக்கு எந்த மாதிரியான அணி தேர்வு செய்யப்படுகிறது என்பது வேறு விஷயமாகும். அடுத்து நிறைய டெஸ்ட் போட்டிகள் வர இருக்கின்றன என்பதை அறிவேன். அதனை மனதில் வைத்து தான் ஐ.பி.எல். போட்டிக்கான பணிச்சுமையை கையாளுவேன். டெஸ்ட் போட்டிக்கு தயாராக எல்லா வகையிலும் முயற்சிப்பேன்’ என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க.வின் உண்மை முகத்தை காட்டுவதே அ.தி.மு.க. போராட்டத்தின் நோக்கம் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி
தி.மு.க.வின் உண்மை முகத்தை காட்டுவதே அ.தி.மு.க. போராட்டத்தின் நோக்கம் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி.
2. 'டாஸ்மாக், லாட்டரி சீட்டு விற்பனையை கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம்' கே.எஸ்.அழகிரி பேட்டி
டாஸ்மாக், லாட்டரி சீட்டு விற்பனையை தமிழ்நாடு காங்கிரஸ் கொள்கை ரீதியாக எதிர்க்கிறது என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
3. ஏ.டி.எம். கொள்ளை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி
தமிழகத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறினார்.
4. டெல்லியில் பாராட்டிவிட்டு தமிழகம் வந்ததும் மத்திய அரசை குறை கூறுவதா? தி.மு.க.வுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி
டெல்லி செல்லும்போது கொரோனா தடுப்பூசியை நிறைவாக வழங்குகிறார்கள் என்று கூறும் நிலையில் தமிழகம் திரும்பியவுடன் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என கூறுவதா? என்று தி.மு.க.வுக்கு பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
5. கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.