கிரிக்கெட்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி + "||" + Indian women to play one-off Test in England

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி
வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
புதுடெல்லி, 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. 

இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் ஜூன் 16-ந் தேதி தொடங்குகிறது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் அணி விளையாடப் போகும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.

இதுதொடர்பாக இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் போர்டு தலைமை அதிகாரி டாம் ஹாரிசன் கூறுகையில், வரும் கோடைக்காலம் இங்கிலாந்து பெண்கள் அணிக்கு சிறப்பானதாக இருக்கும். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களை சொந்தமண்ணில் நடத்த உள்ளதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.